துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த நடிகர் அஜித் – ரசிகர்களை கவர்ந்திழுக்கும் புதிய புகைப்படம்.!

ajith
ajith

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் கடைசியாக நடித்த வலிமை திரைப்படம் வெற்றி படமாக மாறியதை தொடர்ந்து தனது 61 வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அடுத்தகட்ட சூட்டிங்காக படக்குழு தற்பொழுது புனே கிளம்பி உள்ளது.

ஏகே 61 படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருகிறது இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், யோகி பாபு, அஜய், சஞ்சய் தத் மற்றும் பல பிரபலங்கள் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லவில்லை ஆனால் இந்த தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.

அஜித் இந்த படத்தில் நடித்துக் கொண்டும் இருக்கும் போதே.. அடுத்து தனது 62 வது திரைப்படத்தில் நடிப்பதற்கான வேலைகளையும் மறுபக்கம் பார்த்து வருகிறார்.AK 62 படத்தை நயன்தாராவின் கணவரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் தான்  எடுக்க இருக்கிறார் இது இப்படி இருக்க அஜித் பற்றிய செய்து ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது அஜித்.

என்ன தான் சினிமா உலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தனது ஆசைகளையும் நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறார். அந்த வகையில் அஜித் அண்மை காலமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சிகள் அதிகம் ஈடுபட்டு வருகிறார் அதன் மூலம் பல பதக்கங்களையும் அள்ளி வருகிறார் அண்மையில் கூட திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் 6 பதக்கங்களை  வென்று ஆசத்தினார்.

மேலும் அங்கு ரசிகர்களையும் சந்தித்தார் அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலாகின என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் துப்பாக்கியுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் செம்ம மாஸாக இருக்கும் அஜித்.

ajith
ajith