தல அஜித் ஆரம்ப காலத்தில் ஒரு காட்சியில் நடிக்க வாங்கிய சம்பளம்.. இவ்வளவா..

0

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தல அஜித் இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.இத்திரைப்படத்தினை தொடர்ந்து தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார் என்பதை தவிர பெரிதாக எந்த தகவலும் வெளிவராத காரணத்தினால் ரசிகர்கள் பெரிதும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.  இத்திரைப்படத்தினை எச் வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தல அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வந்ததால் தல அஜித் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட வேண்டாம் என்று படக்குழுவினரிடம் கூறினார்.இதன் காரணமாக இரண்டு முறை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தேதியை அறிவித்தும் இதுவரையிலும் வெளிவரவில்லை. எனவே படக்குழுவினர்கள் இந்த மாதம் இறுதியில் வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறிவுள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தல அஜித் பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அரவிந்த் சாமி நடிப்பில் 199]ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாசமலர்,  இத்திரைப்படத்தில் தல அஜீத் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் ஒரு நிமிடக் காட்சியில் நடிப்பதற்காக தல அஜித்  2500 ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் இந்த தகவலை இத்திரைப்படத்தின் இயக்குனர் பல வருடங்கள் கழித்து ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.