விடாமுயற்சி படத்திற்காக உடல் எடையை குறைத்து படும் ஸ்லிம்மாக இருக்கும் அஜித்.! வைரல் புகைப்படம்..

நடிகர் அஜித் விடாமுயற்சி படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ள நிலையில் சமீபத்தில் இருக்கும் இவருடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடைசியாக அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இதனை அடுத்து விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படம் ஆரம்பிப்பதற்குள் தொடர்ந்து சில விஷயங்கள் நடந்து வருவதனால் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போயிருக்கிறது அதாவது முதலில் விக்னேஷ் சிவன் தான் அஜித்தின் இந்த படத்தினை உருவாக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஆனால் சில காரணங்களால் இவர் இந்த படத்தில் இருந்து நீங்கினார்.

எனவே பிறகு லைக்கா நிறுவனம் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தது அந்த வகையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடா முயற்சி என்ற டைட்டில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது வரையிலும் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை எனவே அஜித் ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டுக்காக காத்து வருகின்றனர்.

அஜித் சுற்றுலா மேற்கொண்டு வரும் நிலையில் அடிக்கடி அவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் கசிந்து வருகிறது. அப்படி தற்பொழுது துணிவு பணத்திற்கு பிறகு அஜித் தனது உடம்பை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். தற்பொழுது தனது குடும்பத்துடன் பனி பிரதேசத்திற்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அப்பொழுதும் ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் கேட்டார்கள்.

ajithkumar
ajithkumar

விடாமுயற்சி படத்தில் புதிய கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அஜித் பிரேக் எடுத்துள்ளார் எனவே விரைவில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது தற்பொழுது அஜித் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment