அதிரடியாக உடல் எடையை குறைக்க அஜித் “புதிய லுக்கில்” எப்படி இருக்கிறார் பாருங்கள் – வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித். இவர் வருடத்திற்கு ஒரு தரமான படத்தை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் கடைசி இவர் நடித்த துணிவு திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சொல் ரீதியாக 230 கோடிக்கு மேல அள்ளி புதிய சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து நடிகர் அஜித் இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க  ஏ கே  62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் சொன்ன கதை தயாரிப்பு நிறுவனம் லைகா மற்றும் நடிகர் அஜித்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..

எனவே அவரை தூக்கிவிட்டு  வெற்றி இயக்குனர்  மகிழ் திருமேனிக்கு போட்டு உள்ளதாக பல தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளிவிடவில்லை. முதலில் இயக்குனர் மகிழ் திருமேனி கதை, திரைக்கதை என அனைத்தையும் ஆரம்பத்திலேயே ரெடி செய்து விட்டு பின்பு அஜித் மற்றும் லைக்கா ப்ரொடக்ஷன் உடன் இணைவர்.

அதன் பின் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமிபத்தில் கூட அஜித் வெளிநாடுகளுக்கு சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பிய..

நிலையில் ரசிகர்கள் அவருடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர் அந்தப் புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் அஜித் கொஞ்சம் உடல் எடையை குறைத்துள்ளது போல் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளனர்.. இதோ செம்ம ஸ்டைலாக அஜித் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version