பிரபல நடிகரின் திறமையை பார்த்து கையெடுத்து கும்பிட்ட நடிகர் அஜித்குமார்.! படப்பிடிப்பு தளத்தில் நடந்த தரமான சம்பவம்.

ajith
ajith

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக பலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற இருந்தாலும் 200 கோடி மேல் வசூல் அள்ளியது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் பாசிட்டிவாக தனது அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அஜித் உடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், வீரா, சமுத்திரகனி மற்றும் பல டாப் பிரபலங்கள் படத்தில் நடித்து வருகின்றனர் இந்த படத்திற்காக நடிகர் அஜித் குமார் தனது கெட்டப்பை மாத்தி மாத்தி நடித்து வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. முதல் கட்ட படப்பிடிப்பு 51 நாட்கள் இரவு/ பகல் பார்க்காமல் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் அடுத்த கட்ட சூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது இதில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்களின் காட்சிகள் பெரிதும் எடுக்கப்படும் என தகவல்கள் வெளி வருகின்றன ஆனால் அஜித்தின் 61 வது திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது அதாவது பிரபல நடிகர் ஒருவரை பார்த்து அஜித் கையெடுத்து கும்பிட்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

2002 ஆம் ஆண்டு கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வில்லன். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜயன் பேசியது. அஜித் ரொம்ப தங்கமான ஒரு மனிதர். சினிமா உலகில் தான் வேலை உண்டு என இருப்பார் யாருக்கும் எந்த தொந்தரவு கொடுக்க மாட்டார்.

நாங்கள் இருவரும் வில்லன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஆக்ஷன் காட்சியில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு நான் அந்த பக்கம் விழ வேண்டும் அப்படி விழும்போது எதிர்பாராத விதமாக கண்ணாடி எனது முகத்தில் பட்டு ரத்தம் வந்தது. இதை பார்த்து அஜித் ஒரு நிமிடம் பயந்து போய்விட்டாராம்  உடனே மருத்துவர்கள் வந்து எனக்கு 10 தையல் போட்டனர்.

vijayan
vijayan

நான் முடிந்ததும் முகத்தில் டேபுகளை ஒட்டி விட்டு மீண்டும் நடிக்க வந்தேன் என்னை பார்த்து அவர் வியந்து போய் ஒரு நிமிஷம் ஆச்சரியப்பட்டு அப்படியே நின்று விட்டார். இப்படி அடிபட்ட பிறகும் நீங்கள் நடிக்க வருகிறீர்களே என்னால் முடியாது எனக்கூறி கையெடுத்து கும்பிட்டாராம் அஜித்.