விருமாண்டி திரைப்படத்தில் “நடிகர் அஜித்” – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் கடைசியாக நடித்த விக்ரம் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று 400 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்திற்கு பிறகு உலகநாயகன் கமலஹாசனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்து உள்ளது முதலாவதாக கிடப்பில் கிடந்த இந்தியன் 2 திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து  மணிரத்தினத்துடன் ஒரு படம், ஹச். வினோத்துடன் ஒரு படம், லோகேஷ் உடன் ஒரு படம் என பண்ண உள்ளார்.  இதனால் கமலின் சினிமா மார்க்கெட் உயரும் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது அதற்கு ஏற்றார் போல தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு படத்திற்கு 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. இப்படி ஓடினாலும்.. ஏற்கனவே கமல் திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். அதில் ஒன்றுதான் விருமாண்டி. 2004 ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கிய நடித்த விருமாண்டி திரைப்படம்.

இந்த படத்தில் பசுபதி, நெப்போலியன், அபிராமி என பல திரைப்படங்கள் நடித்திருந்தனர். இதில் கமலின் நடிப்பு பிரமாதம், அதே சமயம் கமல், அபிராமியும் நெருங்கி இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் பெரிய அளவில் பேசப்பட்டது.  படம் அப்பொழுது வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அஜித், கமலை சந்தித்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் கசிந்துள்ளது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம்ம மாஸ் என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் கமலுடன், அஜித் இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை பாருங்கள்..

ajith and kamal
ajith and kamal

Leave a Comment