நினைத்துக்கூட பார்க்க முடியாத புதிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்..! Ak 62 லேட்டஸ்ட் அப்டேட்..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிப்பவர் தான் தல அஜித் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் திறமை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது சினிமாவில் கவனிக்கக் கூடிய ஒரு நடிகராக திகழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது இதனை தொடர்ந்து தற்போது தன்னுடைய 61வது திரைப்படத்தில் தல அஜித் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறாராம்.

மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருவது மட்டுமில்லாமல் தல அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது இந்த திரைப்படம் தல அஜித்திற்கு 62வது திரைப்படம் ஆகும்.

மேலும் முதன் முதலாக இப்படி ஒரு கூட்டணி இணைந்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகரித்துள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே நானும் ரவுடிதான் மற்றும் சமீபத்தில் காத்துவாக்குல 2 காதல் போன்ற நல்ல கதையம்சமுள்ள திரைப் படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அஜித்தை வைத்து படம் எடுக்கப் போவதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள் மேலும் இந்த திரைப்படம் பற்றிய ஒரு அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது அதாவது இந்த திரைப்படத்தில் தல அஜித் தமிழகம் முழுவதும் உணவு நிறுவனங்களை நடத்துபவராக நடிக்க உள்ளாராம்.

ajithkumar-2

இவ்வாறு தல அஜித் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை ஆகும்.

Leave a Comment

Exit mobile version