சினிமாவில் மாட்டுமல்ல நிஜத்திலும் தொட்டதை எல்லாம் சாதனையாக மாற்றும் தல அஜித்.! துப்பாக்கி சுடுதலில் தங்க வேட்டை நடத்தியுள்ளார்.! வலிமை படத்திற்கு முன்பாகவே ரசிகர்கள் செம குஷி.

அஜித் தமிழ் சினிமாவையும் தாண்டி பல திறமைகளைக் வெளிக் காட்டி வருகிறார். கார் பைக் ரேசிங் சமைப்பது ட்ரோன் எனத் தொடங்கி துப்பாக்கி சுடுதல் வரை தனது திறமையை காட்டிக் கொண்டு ரசிகர்களை தூக்கி வைத்துக் கொண்டு வருகிறார்.

அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்து விட்டாலும் அதன் பிறகு அடுத்த படத்தை நோக்கி செல்வதற்கு முன்பாக ஒரு சாதனையை செய்து உள்ளார் அது என்னவென்றால் 40 வருடகாலமாக தமிழ்நாட்டில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது அதில் தல அஜித் தற்போது பயிற்சி பெற்ற புகைப்படங்கள் சமூக வளைதள பக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில்  கொண்டாடபட்டிருந்தன.

இப்படி இருக்கின்ற நிலையில் தல அஜித் சுடும் போட்டியில் ஒரு தங்கம் ஒரு சில்வர் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மொத்தம் துப்பாக்கி சுடுதலில் 6 பிரிவின் கீழ் தல அஜித் 4 தங்கம், 2 சில்வர் கைப்பற்றினார்.

1. ஏர் பிஸ்டல் 10 மீட்டர் (ISSF) – தங்கம், 2. சென்டர் பயர் பிஸ்டல் 25 மீட்டர் – சில்வர், 3. சென்டர் பயர் பிஸ்டல் NR 25 மீட்டர் – தங்கம், 4. ஸ்டாண்டர்ட் பிஸ்டல் (ISSF) 25 மீட்டர்  – தங்கம், 5. ஸ்டாண்டர்ட் பிஸ்டல் NR 25 மீட்டர்  – சில்வர், 6. பயர் பிஸ்டல்.22 NR 50 மீட்டர் – தங்கம்

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment