விஜய்சேதுபதிக்கு போன் செய்த அஜீத்!! காரணம் இதுதான்..

0

actor ajith called vijaysethupathy:நடிகர் விஜய் சேதுபதி தற்போது முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 800 என்கின்ற டைட்டிலை  வைத்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகியது.

அது வெளியானதிலிருந்து தொடர்ந்து பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த மோஷன் போஸ்டர் வீடியோவில் இலங்கை குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு போன்றவைகள் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் முத்தையா முரளிதரன் அவர்கள் ராஜபக்சேவின் ஆதரவாளர் என்பதால் ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

மேலும் இது ஈழத் தமிழர்களுக்கு நாம் செய்யும் துரோகம் எனவும் கூறுகின்றனர். எனவே ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என அனைவருமே இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என கூறுகின்றனர்.

மீறி நடித்தால் இதற்கு மேல் அவர் நடிக்கும்  எந்த திரைப்படமும் ஓடாது என மிரட்டுகின்றனர். ரசிகர்களை தொடர்ந்து மேலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் இசையமைப்பாளர்கள், கவிஞர்கள்,  நடிகர்,  நடிகைகள் என அனைவருமே இந்த திரைப்படத்தில் நடிக்ககூடாது என விஜய் சேதுபதி இடம் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இவர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதால்  அந்த திரைப்படத்தின் நிலைமை என்ன ஆகும் என படக்குழு பீதியில் உள்ளது. இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதிக்கு அஜித் அவர்கள் கால் பண்ணி இந்த திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.