லவ் டுடே நடிகரிடம் வாய்ப்பு கேட்டு நிற்கும் அஜித் பட நடிகர்.! இது என்ன கொடும சார்..

0
AJITH
AJITH

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் லவ் டுடே இந்த திரைப்படத்திற்கு தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோவான பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர்ந்து ஏராளமான திரை பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

ஏன் சொல்லப்போனால் நடிகர் விஜய் கூட பிரதீப் அவர்களிடம் கதை கேட்டுவிட்டு பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளார் இப்படிப்பட்ட நிலையில் விரைவில் பிரதீப் இயக்கத்தில் விஜய் அவர்களின் நடிப்பில் தளபதியாக 28வது திரைப்படம் உருவாக இருக்கிறது .இப்படிப்பட்ட நிலையில் பிரதீப் அவர்களுடைய இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கோமாளி.

இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பலராலும் பாராட்டப்படவில்லை. ஆனால் தானாக இயக்கி தானாகவே நடித்த முதல் திரைப்படமாக பிரதீப்பிற்கு லவ் டுடே திரைப்படம் அமைந்துள்ளது. தன்னுடைய சிறந்த நடிப்பு திறமை நாள் பலரையும் கவர்ந்துள்ளார். அந்த வகையில் இந்த திரைப்படம் வெளியாகி 10 நாட்களில் 50 கோடி வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளது.

மேலும் இனிவரும் நாட்களில் 100 கோடியை நெருங்கி இருக்கிறது இவ்வாறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அளவிற்கு வசூல் செய்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு சோசியல் மீடியாவின் மூலம் பிரதிபிடம் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வாட்ஸப் காதல் என்ற குறும்படத்தில் இடம் பிடித்திருந்தால் ஷேர் செய்ங்க சார் என கேட்டிருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எட்டு வருடங்கள் கழித்து அந்த டுவிட்டுக்கு பிரேம்ஜி இப்பொழுது பதில் அளித்துள்ளார். “அதில் சார் தயவு செஞ்சு உங்க அடுத்த படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க சார்” என என ட்டுவிட் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.