தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ‘ஏகே 61’திரைப்படத்தில் நடித்த வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது அஜித்தை வைத்து படம் இயக்க ஆசை இருப்பதாக பிரபல இயக்குனர் சமீபத்தில் கூறியுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் இரவின் நிழல்.
இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் கலவை விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இரவின் நிழல் திரைப்படத்தின் இயக்குனர் பார்த்திபன் தான் சமீப பேட்டி ஒன்றில் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்க ஆசை இருப்பதாக கூறியுள்ளார். அதாவது இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
மேலும் நடிப்பதையும் தாண்டி படம் இயக்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் பார்த்திபன் மற்றும் அஜித் இருவரும் இணைந்து 1999ஆம் ஆண்டு நீ வருவாய்யென, 2000ஆம் ஆண்டு உன்னை கொடு என்னை தருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் அஜித்தின் கையைப் பிடித்து நடந்து வருவது போல் இடம்பெற்றிருக்கும் எனவே அதனைக் கூறி பார்த்திபன் தற்பொழுது அஜித் என் கையைப் பிடித்து அழைத்து செல்வது போல் இருக்கும் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என கூறி உள்ளார். அஜித் அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது நம்மளை போல் சாதாரணமாக ஒரு நடிகர் ஆனால் விரைவில் சினிமாவில் வளர்ந்து யாரும் தொட முடியாத அளவிற்கு வளர்ந்துள்ளர்.
இதனைத் தொடர்ந்து இவர் மிகவும் தைரியமானவர் என்றும் கூறலாம் ஏனென்றால் அப்பொழுதே ரசிகர் சங்கத்தை நீக்கினார் நானும் இதற்கு முன்பே என்னுடைய ரசிகர் சங்கத்தை உடைத்து பார்த்திபன் மனிதநேய சங்கமாக உருவாக்கினேன் மேலும் அஜித் தனித்துவமான ஒரு மனிதன் என்றும் கூறியுள்ளார்.