விடுமுறை நாட்களை தன்னுடைய மனைவி ஷாலினிவுடன் கழித்து வரும் நடிகர் அஜித்.! நடுரோட்டில் ஷாலினியை கட்டிப்பிடித்துக் கொண்டு கியூட்டாக இருக்கும் அழகிய புகைப்படம்..

90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஷாலினி இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது. மேலும் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழ், மலையாளம் போன்ற மொழி திரைப்படங்களின் நடித்து பிரபலமடைந்தார் அதன் பிறகு தான் இவருக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர் திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார் இருந்தாலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.

நடிகர் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ஆம் தேதி அன்று வெளியான இந்த திரைப்படம் தற்பொழுது வரையிலும் மிகவும் வெற்றிகரமாக திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தின் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் பணிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் தயார் செய்து வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்தும் சில தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் அஜித் தன்னுடைய விடுமுறை நாட்களை குடும்பத்துடன் செலவிட வேண்டும் என்பதற்காக ஃபாரினில் ஷாலினி உடன் சுற்றி வருகிறார். அந்த வகையில் ரோட்டின் ஓரமாக ஷாலினியை அழகாக கட்டிப்பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்து இருக்கிறார் அந்த புகைப்படத்தை ஷாலினி சமூக வலைதளங்களில் வெளியிட ஏராளமான லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து  வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment