பிரபல விஜய் டிவி சினிமாவில் அறிமுகமாக முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல தொலைக்காட்சியாக அமைகிறது. அந்த வகையில் ஒருவர் சினிமாவில் பிரபலமாக வேண்டுமானால் விஜய் டிவியை தேர்ந்து எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஏனென்றால் காமெடி நிகழ்ச்சி,பாடல் நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி,குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பலர் சின்னத்திரைக்கு அறிமுகமாகி வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக வளர்ந்து உள்ளார்கள். அந்த வகையில் காமெடியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் மதுரை முத்து.
இவர் காமெடி போட்டியில் கலந்து கொண்டு அதன் பிறகு தனது காமெடி திறமையினால் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் சமீபத்தில் கூட காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் 9 போட்டியாளர்களில் ஒருவராக பங்கு பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் இவர் சில நாட்கள் மட்டுமே நீடித்து இருந்தார். அதன்பிறகு இந்நிகழ்ச்சியில் விட்டு வெளியேறினார் ஆனால் அடிக்கடி காமெடி செய்வதற்காக சிறப்பு விருந்தினராக வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் இவரின் காமெடி திறமையின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இவர் கிட்டத்தட்ட 15 வருடங்களாக காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மதுரை முத்து தல அஜித்துடன் இணைந்து சில வருடங்களுக்கு முன்பு எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.