பார்ட்டியில் கலந்துக்கொண்டு மிகவும் ரொமான்டிக்காக ஷாலினிக்கு முத்தம் தரும் அஜித்.! வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியார் கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியிருந்தார்.

மேலும் இவர்களை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் இதனை அடுத்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிதாக விக்னேஷ் சிவன் எழுதிய கதை ஒர்க்கவுட் ஆகாத காரணத்தினால் அஜித் வேண்டாம் என கூறிவிட்டு மகிழ் திருமேனி இயக்குனருடன் கைகோர்த்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் விரைவில் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்து வருகின்றார்கள். இவ்வாறு தனக்கு கிடைத்த இடைவேளியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக நடிகர் அஜித் தற்பொழுது சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் அஜித் ஷாலினி உடன் சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களும் வெளியானது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அஜித் ஸ்காட்லாந்து நாட்டில் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்பொழுது நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் பார்ட்டியில் மிகவும் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ajith shalini

நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிக்கவில்லை மேலும் இவர் விரைவில் திரைப்படங்களின் நடிப்பாரான எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய குழந்தைகள், கணவர் ஆகியோர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

shalini ajith 1

அந்த வகையில் தற்பொழுது வெளிநாட்டில் தன்னுடைய கணவர் அஜித்துடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார் அங்கு அஜித் மிகவும் ரொமான்டிக்காக முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version