தல அஜித்தின் 61 திரைப்படத்தினை பற்றி மாஸ் அப்டேட்.! உற்சாகத்தில் ரசிகர்கள்

ajith-like
ajith-like

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தல அஜித் இவர் நடிப்பில் கடைசியாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேலாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தினை வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்.

இத்திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து வருகிறார்கள். அந்த வகையில் சில மாதங்களாக இத்திரைப்படம் எப்போது ரிலீசாகும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தல அஜித்தின் 61ஆவது திரைப்படத்தினை பற்றிய தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

வலிமை திரைப்படத்தினை தொடர்ந்து  எச்.வினோத் மற்றும் போனிகபூர் இவர்களின் கூட்டணியில் அஜித்தின் 61ஆவது திரைப்படம் உருவாக உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார்கள்.  அதனை உறுதிப்படுத்தும் வகையில் சில தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது அஜித்தின் 61வது திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்றும் பல்வேறு லொகேஷன்களில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் என்றும் கூறியுள்ளார்கள். அந்த வகையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பினை ஏழு மாதங்களுக்குள் முழுமையாக நடத்தி முடித்துவிட்டு அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினர்கள் முடிவெடுத்துள்ளாராம்.

ajith 12
ajith 12

இந்நிலையில் விரைவில் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் போனிகபூர் தயாரிக்க வினோத் இயக்க தல அஜித் மூன்றாவது முறையாக நடிக்க உள்ளார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றதால் வலிமை திரைப்படமும் கண்டிப்பாக வசூல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று விடும் என்றும் வலிமை திரைப்படத்தின் மீதம் பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு  இருப்பதாகவும் விரைவில் வெளியாகும் என்றும் கூறி உள்ளார்கள் .