ஆடு பகையா இருக்கும்பொழுது குட்டி மட்டும் எப்படி உறவாட முடியும்.! வெளியானது ‘பட்டத்து அரசன்’ டிரைலர்..

0

வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அதர்வா முரளி. இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த குருதி ஆட்டம், டிரிக்கர் போன்ற திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றது. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் நல்ல தரமான கதை உள்ள திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக அதர்வா முரளி பல காலங்களாக காத்திருந்த நிலையில் தற்பொழுது களவாணி, வாகை சூடவா போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஏ சற்குணம் இயக்கத்தில் ‘பட்டத்து அரசன்  என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லர் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. நடிகர் அதர்வாளை தொடர்ந்து ராஜ்கிரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்தது இருக்கிறார் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. பட்டத்து அரசன் திரைப்படத்தின் டிரைலர் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் உடன் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.