பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க ஒன்று கூடிய “நடிகர் – நடிகைகள்”..! லேட்டஸ்ட் கிளிக்..

சினிமா புதியது நோக்கி ஓட ஓட ஒவ்வொரு இயக்குனர்களும் அப்டேட் பண்ணி இந்த காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரியான படத்தை கொடுக்க மக்கள் மற்றும் ரசிகர்கள் நன்கு படத்தைப் பார்த்து கொண்டாடித்திற்கின்றனர். அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் பழைய இயக்குனராக இருந்தாலும் தன்னை அப்டேட் செய்து கொண்டு காலத்திற்கு ஏற்றவாறு நல்ல நல்ல படங்களை இறக்கி அசத்துகிறா.

ர் தற்பொழுது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. படம் நீளமாக இருந்ததன் காரணமாக படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார் முதல் பாகம் அவர் சொன்னது போலவே செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு படத்தை பார்த்து வருகின்றனர் பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல விமர்சனத்தையே இதுவரையும் பெற்றிருக்கிறது அதன் காரணத்தினால் வசூலும் அடித்து நொறுக்குகிறது முதல் நாளில் 80 கோடிக்கு மேல் அள்ளியது இரண்டாவது நாள் 70 கோடி மூன்றாவது நாளும் பிரம்மாண்டமான வசூலை அள்ளியது.

ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களில் மட்டுமே 230 கோடிக்கு மேல் அள்ளி உள்ளது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களை அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டனர். ஒரு சிலர் டிக்கெட்டு கிடைக்காமல் இன்னும் படத்தை பார்க்காமல் இருக்கின்றனர் இந்த நிலையில் தான் பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து உள்ளனர் மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version