கஷ்டத்தில் இருக்கும் பிரபல நடிகரை கைகொடுத்து தூக்கிவிட நடிகர் ஆர்யா.! நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..

0

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் போட்டியாளர்களாக பங்குபெற்று இதன் மூலம் பிரபலமடைந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகி கலக்கி வருபவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி வெள்ளித்திரையில் தொடர்ந்து காமெடி நடிகராக கலக்கி வந்து தற்போது ஹீரோவாக புதிய அவதாரம் எடுத்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சந்தானம்.

சிவகார்த்திகேயன் திரைப்படத்தினை போலவே இவரின் திரைப்படத்தையும் தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் காமெடி, காதல் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும்.  இவ்வாறு முன்னணி நடிகராக கலக்கி வரும் இவர் நடிகர் ஆர்யாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தின் பொழுதுதான் இவர்களுக்கிடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகை இத்திரைப்படத்தினை தொடர்ந்து ராஜா ராணி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, சிக்கு புக்கு, சேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தார்கள்.

அதே போல் இவர்கள் இணைந்து நடிக்கும் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால் சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வருவதால் ஆர்யா திரைப்படத்தில் நடிக்க முடியாமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆர்யா சந்தானத்திற்கு மிகப்பெரிய ஒரு உதவியை செய்துள்ளார்

இந்த தகவல் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சந்தானம் தற்போது சபாபதி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின்  வியாபாரத்திற்கு நடிகர் ஆர்யா உதவி செய்துள்ளார்.

இதன் காரணம் சந்தானம் தனது நட்பை வெளிப்படுத்தும் வகையில் ஆர்யாவை கட்டி பிடித்து கண் கலங்கி நெகிழ்ச்சியடைந்தார் என்று கூறப்படுகிறது.