சங்கர் எடுத்த அதிரடி முடிவு.! உச்சகட்ட சந்தோஷத்தில் நடிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள்.?

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்களை விட்டு பிரிந்த நடிகர்களில் ஒருவர்தான் காமெடி நடிகர் விவேக் இவருக்கு பல புனைப்பெயர்கள் இருந்தாலும் நடிகர் விவேக் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அதிலும் குறிப்பாக விவேக் தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறும் விதமாக காமெடி செய்யும் அவரது இயல்பான நடிப்பு மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.இவர் மறைந்தாலும் இவர் நடித்த திரைப்படங்கள் இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் இவர் ரசிகர்களை விட்டு பிரிந்த பிறகு வெளிவந்தாலும் தற்பொழுது இவரது நடிப்பில் இறுதியாக உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் விவேக் கடைசியாக இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தாராம்.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் இவருக்கு இன்னும் நான்கு நாட்கள் நடிக்க வேண்டியது இருந்ததாம் ஆனால் அவர் மறைந்து விட்டதால் இயக்குனர் சங்கர்  நவீன டெக்னாலஜி மூலம் நடிகர் விவேக்கை மீண்டும் அப்படியே திரைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருவதாக இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதனைத்தொடர்ந்து பார்த்தால் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நீங்கள் சொன்ன கருத்துக்களை நாங்கள் இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். நீங்கள் இல்லாவிட்டாலும் நீங்கள் நடித்த திரைப்படத்தை நாங்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறோம் என்று ஒரு சில ரசிகர்கள் சோகமாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

vivek

Leave a Comment

Exit mobile version