அர்ஜுனின் பிரமாண்ட ஹிட் திரைப்படம்.! 27 வருடத்திற்கு பிறகு இரண்டாம் பாகம்.!! வைரலாகும் வெறித்தனமான பதிவு.

action king arjun movie: தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் என அனைவரும் அழைக்கிறார்கள். ஆனால் இவருக்கு எல்லாம் முன்னோடியாக இருந்தவர் கேடி குஞ்சுமோன் தயாரிப்பாளர் தான். இவர் 80 காலகட்டத்தில் பல திரைப்படங்களை தயாரித்து கொடி கட்டி பறந்தவர்.

இவர் தயாரிப்பில் வெளியாகிய காதல் தேசம், காதலன், ரட்சகன், ஜென்டில்மேன், சூரியன் ஆகிய திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது, இப்படி பல ஹிட் படங்களை தயாரித்தவர் என பெருமைக்குரியவர்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக விளங்கி வரும் அஜித், விஜய், சரத்குமார், நாகார்ஜுனன் ஆகியவர்களை அறிமுகப்படுத்தியவரும் இவர் தான். மேலும் இசையில் பல விருதுகளை வென்ற ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் ஷங்கரையும் அறிமுகப்படுத்தியவர் இவரே.

ஒரு காலகட்டத்தில் குஞ்சு மோகன் தயாரிக்கும் திரைப்படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள், அதுமட்டுமில்லாமல் இவர் தயாரிக்கும் திரைப்படத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தொடர்ந்து வெற்றிக்கனியை ரசித்து வந்த குஞ்சு மோகனுக்கு விஜய் வைத்து தயாரித்த நிலவே வா, என்றென்றும் காதல் ஆகிய திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.

அதன் பிறகு தன்னுடைய மகனை வைத்து இரண்டு திரைப்படத்தை எடுத்து அதுவும் ரிலீஸ் ஆகாததால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார், அதனால் நீண்ட காலமாக எந்த ஒரு படத்தையும் தயாரிக்காமல் ரெஸ்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் தற்பொழுது 1953இல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போவதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜென்டில்மேன் இரண்டாம் பாகம் தமிழ மட்டுமல்லாமல் ஐந்து மொழிகளிலும் உருவாக்கப்பட வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, அதுமட்டுமல்லாமல் இது வரை யாரும் இப்படி ஒரு திரைப்படத்தை தயாரித்து இல்லை என வாயில் கை வைக்கும் அளவிற்கு புதிய தொழில்நுட்பங்களை வைத்து பிரமாண்டத்தை காட்ட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படம் வெளியான பிறகு தான் பிரமாண்டமா இல்லையா என்பது தெரியவரும், ஆனாலும் ஜென்டில்மேன் இரண்டாவது பாகம் மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment