தளபதி விஜய் போல் மாறிய நட்சத்திர கிரிக்கெட் வீரர்.? வீடியோவை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.

VIJAY
VIJAY

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மக்கள் பார்வையில் படுவார்கள் அந்த வகையில் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் டேவிட் வார்னர் தற்போது கிரிக்கெட்டையும் தாண்டி தனது மற்ற திறமைகளின் மூலம் மக்களை கவர்ந்து இழுத்து வருகிறார்.

அந்த வகையில் கிரிக்கெட்டை தவிர மற்ற நேரங்களில் பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, காமெடி பண்ணுவமாக இருந்து வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் டேவிட் வார்னர் அடிக்கடி வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, விஜய் தொடங்கி தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர் பாகுபலி பிரபாஸ் போன்ற பல நட்சத்திர இடம் பெற்றுயுள்ள வீடியோ மற்றும் பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார் டேவிட் வார்னர்.

இதன் மூலம் பல கோடி மக்களை தன் வசப்படுத்தினார். அடிக்கடி வீடியோக்களை வெளியிட்டு வந்த டேவிட் வார்னர் தற்போது விஜயின் தெறி படத்தில் இடம்பெற்றுள்ள “செல்லா குட்டி” என்ற பாடலுக்கு டேவிட் வார்னர் வித்தியாசமாக எடிட் செய்து தனது திறமையை அதில் காண்பித்துள்ளார்.

சமூக வலைதளப் பக்கத்தில் அந்த வீடியோ பகிரப்பட்டு தற்பொழுது லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் பார்ப்பதற்கு விஜய் போலவே இருக்கிறீர்கள் என்று கூறி கமெண்ட் அடித்தும் வருகின்றனர்.  இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.