பிக்பாஸ் ஆரி குடும்பத்துடன் ஈரோடு மகேஷ் குடும்பம் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம்.

0
erode-mahesh1

நடிகர் ஆரி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 கில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இவரின் சமூக ஆர்வம்,  இயற்கையின் மீது உள்ள நாட்டம், தேசப்பற்று என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இவர் சினிமாவில் இதற்கு முன் ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இவர் பிரபலம் ஆகவில்லை. இந்த பிக்பாஸ் மூலம் தான் இவர் செய்த அனைத்து சமூக நலன்களும் மக்களுக்கு தெரியவந்தது. எனவே இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மி ஒன்றை ஆரம்பித்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர் பிக்பாஸில் கிடைத்த 50 லட்சத்தையும் தனது சொந்த செலவுக்கு வைத்துக் கொள்ளாமல் பொதுமக்களுக்கு அதிலும் குறிப்பாக சிறுவர்களின் புற்றுநோய் காப்பகத்துக்கும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என செலவு செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலமான ஈரோடு மகேஷ், அவரது மனைவி மற்றும் ஆரி, ஆரியின் மனைவி மற்றும் அவரது நண்பர் என இவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ஆரி மற்றும் ஈரோடு மகேஷின் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

ari mahesh
ari mahesh