திரை பயணத்தில் பாக்கிய ராஜ் சாதித்த சாதனைகள்.!

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவின் முதல் படமான ‘பதினாறு வயதினிலே’ என்ற திரைப்படத்தில் மூலம் உதவி இயக்குனராக பாக்கியராஜ் தன் வாழ்க்கையை தொடங்கினார். மேலும் இவர் பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் கவுண்டமணியுடன் ஒரு காட்சியில் நடித்திருப்பார்.

மேலும் இவர் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம்மானார் நடிகர் பாக்கியராஜ் அவர் முதல் முதலில் நடித்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பையும் ரசிகர் மத்தியில் நல்ல ஈர்ப்பையும் பெற்றுத்தந்தது. அதுமட்டுமில்லாமல் சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், கன்னிப்பருவத்திலே போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர்  பாக்கியராஜ்.

தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் தருவதற்கு தள்ளாடி நிற்கும் வழியில் இவர் ஒரு வருடத்திற்கு நான்கு வெற்றித் திரைப்படங்களை  கொடுத்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான மௌனகீதங்கள் என்ற திரைப்படத்தில் பாக்யராஜ், சரிதா மற்றும் பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

bhagyaraj
bhagyaraj

இந்த திரைப்படம் திரையரங்குகளில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலையும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த ‘இன்று போய் நாளை வா’ என்ற திரைப்படத்தில் முழுக்க முழுக்க வெறும் நகைச்சுவை காட்சிகள் மட்டும்தான் இருந்தது.

இந்த மௌன கீதங்கள் திரைப்படத்தை ரீமேக் செய்து ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் சந்தானம்,பவர் ஸ்டார்,சேதுராமன்,ஆகியோர் நடித்துள்ளார்.பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘விடியும் வரை காத்திரு’ என்ற திரைப்படம் திரை அரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி பேரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

Leave a Comment