சாதனை மேல் சாதனை செய்யும் வலிமை : தமிழகத்தில் மட்டும் எவ்வளவு திரையரங்குகளில் வெளியாக போகிறது தெரியுமா.? ஆச்சரியத்தில் உறைந்து நிற்கும் மற்ற நடிகர்கள்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் போனி கபூர் அவர்கள் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தை இதுவரை யாரும் எடுக்காத ஒரு கோணத்தில் ஹச். வினோத்  எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள், glimpse வீடியோ என அனைத்தும் வெளியாகி வேற லெவலில் அசத்தியது. . படத்தின் டிரைலரும் மக்களை பெருமளவில் கவரும் வகையில் தான் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படி வலிமை படம் பத்தி எல்லாமே பாசிட்டிவாக இருப்பதால் படத்தை போட்டி போட்டுக்கொண்டு விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க ரெடியாக இருக்கின்றனர்.

அடுத்த வருடம் பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வருகிறது. இந்த படத்தை தவிர வேறு எந்த ஒரு திரைப்படமும் களத்தில் மோதாமல் இருப்பதால் திரையரங்குகள் வேறுவழியில்லாமல் வலிமை படத்தையும் வாங்குவதற்கு முனைப்பு காட்டி வருகிறது.  இந்த திரைப்படம் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

இதனால் முதல் வாரத்தில் மட்டும் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 800 அல்லது 900 திரையரங்குகளில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டுமே இவ்வளவு திரையரங்குகளில் என்றால் மற்ற மொழிகளில் சொல்லவேண்டும் வேற லெவல் திரையரங்குகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது.

Leave a Comment