ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியலின் மூலம் சின்னத்திரை நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கேரக்டரில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் டி ஆர் பி யில் முன்னணி ஷோ-வாக வலம் வந்து கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் எப்படியாவது வெள்ளித்திரையில் நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
இவர் இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். ரசிகர்களும் இவர் போடும் புகைப்படங்களுக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.
Pool time 🌊☺️😀 pic.twitter.com/J4N6gp1uaF
— Dharshaa Gupta (@DharshaaGupta) February 27, 2021