மாநாடு திரைப்படத்தின் மிரட்டலான கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா.!! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்…

0

நடிகர் சிம்பு தற்போது சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்தார்.

இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைத்து கிராமத்து இளைஞன் போல் மாறினார். பின்னர் அதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தற்போது சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்போது மாநாடு திரைப்படத்துக்காக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சிம்பு, வைபவ், சதீஷ், பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் போன்றவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் லீக்காகி வைரலாகி வந்தது.

மேலும் அந்த வகையில் தற்போது இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா போலீஸ் உடையில் இருப்பது போல புகைப்படம் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர் அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியுடன் பேசிக் கொண்டிருப்பது போல் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் எஸ் ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்துள்ளத்தால் படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

sjsurya manadu
sjsurya manadu