மணிவண்ணனின் அறிவுரையின்படி பிரபலம் ஒருவரிடம் மன்னிப்பு கேட்ட தேவயானி.! எதற்காக தெரியுமா.?

80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்தவர் தான் நடிகை தேவயானி இவர் 1996ஆம் ஆண்டு வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்ற பூமணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார் மேலும் இந்த படத்தில் முரளி, பிரகாஷ்ராஜ், மணிவண்ணன், வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

பூமணி படத்தின் பொழுது படப்பிடிப்பு கலைஞர் பூபதி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது தேவயானி கொஞ்சம் இங்கே பாருங்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார் அதற்கு நடிகை தேவயானி ஆத்திரமடைந்து விட்டாராம் அதாவது இயக்குனர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் போன்றவர்கள் என்னை பெயர் சொல்லி கூப்பிடலாம் ஒரு சாதாரண டெக்னீசியன் எப்படி என்னை பெயர் சொல்லி அழைக்கலாம் என்று கேட்டுள்ளார்.

அந்த சம்பவம் குறித்த தகவல் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது மேலும் சோசியல் மீடியாவில் இந்த தகவல் வைரலாகி வருகிறது. அதாவது சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மணிவண்ணன் அந்த சமூகத்தின் பொழுது படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் அதற்கு முன்பாகவே காதல் கோட்டை படத்தில் தேவயானி உடன் சேர்ந்து இயக்குனர் மணிவண்ணன் நடித்திருக்கிறார்.

இதனால் இவர்களுக்கு அறிமுகம் இருக்கிறது படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவுடன் எங்க அப்பா அந்த பொண்ணு தேவயானி உடனே என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் தேவயானியிடம் மற்றவர்கள் கூப்பிட தானே நமக்கு பெயர் வைத்திருக்காங்க என்னைக் கூட இவ்வளவு பேர் பெயர் சொல்லித்தான் அழைக்கிறார்கள் அதற்காக நான் கோபப்பட முடியுமா என்று சொல்லி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதன் பிறகு நடந்த சம்பவத்திற்கு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேவையானிடம் சொல்லி இருக்கிறார் எனவே புகைப்பட கலைஞர் பூபதி எடுத்த ஆல்பத்தை பட குழுவினர்கள் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அதை பார்த்து தேவயானி மிரண்டு விட்டாராம் அந்த அளவிற்கு மிகவும் அழகாக பூபதி புகைப்படங்களை எடுத்து இருந்தாராம் எனவே அந்த நேரத்தில் படக்குழுவினர்கள் அனைவரும் முன்பும் பூபதியிடம் தேவயானி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

மேலும் உங்களை ஜூனியர் டெக்னீசியன் என்று நினைத்து விட்டேன் ஐ அம் சாரி என பூபதி மன்னிப்பு கேட்டு சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மேலும் தேவயானியிடம் மணிவண்ணன் எடுத்துச் சொன்னபோது அவர் தன்னுடைய தவறை உணர்ந்து பொறுமையாக கேட்டுக் கொண்டாராம் இதனை இயக்குனர் களஞ்சியம் சமீப்  பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment