உங்கள் வீட்டில் கார் மற்றும் ஏசி இருக்கிறதா.! அப்போ இந்த ஆப்பு உங்களுக்கு தான்.! வருகிறது புதிய சட்டம்.

0
ac-car
ac-car

வீட்டில் ஏசி, சொந்த கார், சொந்த வீடு, என சில வசதிகளைப் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு குடும்ப அட்டையில் இருந்து பல சலுகைகளை அதிரடியாக நீக்க இருக்கிறது அரசு, இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.

குடும்ப அட்டை திட்டம் பொதுவாக வறுமையில் வாடும் மக்களுக்காகவும், நடுத்தர மக்களுக்காகவும் கொண்டுவரப்பட்டது இந்த திட்டத்தில் அவர்கள் தான் பயனடைய வேண்டும், ஆனால் நமது நாட்டில் பெரும் பணக்காரர்களும் ஆட்சியில் உள்ளவர்களும் இந்த திட்டத்தை மானிய விலையில் வாங்கி வருகிறார்கள்.

இதுபோன்ற புகார்கள் அடிக்கடி தமிழக அரசிடம் வருவதால் இதனை அதிரடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்கள், அதனால் குடும்ப அட்டை முன்னுரிமையில் இருந்து நீக்கப்பட வேண்டிய விதிமுறைகள் சில வழங்கப்பட்டுள்ளது.

5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது, அதேபோல் மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்றிருக்கும் அதிகாரிகளுக்கு எந்த சலுகையும் கிடையாது, மேலும் சொந்தமாக கார் வைத்து தங்களுடைய பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்தும் நபருக்கு சலுகை ரத்து செய்யப்படுகிறது.

ஏசி வைத்திருந்தாலோ அல்லது மூன்றுக்கு மேற்பட்ட அரை வைத்து காங்கிரட் வீடுகளை கட்டி இருந்தாலும் அந்த குடும்பத்திற்கு குடும்ப அட்டை ரத்து செய்யப்படும், அது மட்டுமில்லாமல் வணிக நிறுவனங்களை நடத்தும் குடும்பத்திற்கும். அதேபோல் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மேலே உள்ள குடும்பத்திற்கும் இந்த சலுகைகள் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார்கள்.

மேலே உள்ள விதிகளில் ஏதேனும் ஒன்று இந்த குடும்பம் பெற்றிருந்தாலோ, குடும்ப மானியம் பெற தகுதி இல்லாத குடும்பமாக கணக்கிடப்படுகிறது, அதேபோல் இந்த தகுதி உள்ள குடும்பங்கள் குடும்ப அட்டையை பயன்படுத்தினால் அது விரைவில் மாற்றப்படும் என அறிவித்துள்ளார்கள். அதற்காக குழு ஒன்று அமைத்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள் அரசு.