இந்திய மாடல் அழகியாகவும் நடிகையாகவும் வலம் வருபவர் அபிராமி. இவர் 2018 ஆம் ஆண்டு நோட்டா என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு 2019ஆம் ஆண்டு தமிழில் களவு என்ற திரைப்படத்திலும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
ஆனால் இவருக்கு எந்த ஒரு திரைப்படமும் பிரபலத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. அதன் பிறகு டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இரு துருவம், ஆதம் என ஒரு சில வைஃப் சீரியலில் நடித்து வந்த இவர் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என சமூக வளைதளத்தில் மற்ற நடிகைகளைப் போல் இவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
ஆனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி வருகிறது. என்னதான் அழகு, நடனம், முகபாவனை இருந்தாலும் பெரிதாக படவாய்ப்பு மட்டும் அமையவில்லை பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது கவின் காதல் முகேன் காதல் என பிக்பாஸ் வீட்டில் இவரது பிரச்சனை சமூக வலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் புகைப்படங்களை வெளியிடும் அபிராமி சமீபத்தில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு குண்டா ஆகிவிட்டீர்கள் என சகட்டுமேனிக்கு கமெண்ட் செய்துள்ளார்கள் அதற்கு அபிராமி தக்க பதிலடி கொடுத்துள்ளார் அதில் நான் என்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டாம்.

அதேபோல் நான் எப்பொழுது சிரிக்க வேண்டும் சிரிக்க கூடாது என்பதையும் சொல்ல வேண்டாம், குறிப்பாக நான் என்ன உடுத்த வேண்டும் என்பதை எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்ல வேண்டாம், அது யாராக இருந்தாலும் சரி நான் யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ய வரவில்லை நான் நடிகை தான் ஆனால் வெறும் நடிகை மட்டும் கிடையாது என ரசிகர்களின் பதிவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இவர் லாக் டவுன் சமயத்தில் சற்று உடல் அதிகரித்ததால் தான் இதுபோல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். விரைவில் இவர் உடலை குறைத்து பழைய ஃபார்முக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.