வெளிநாட்டிலும் வாரிசு படத்தை தூக்கி சாப்பிட்ட அஜித்தின் துணிவு.! குஷியில் ரசிகர்கள்

0
thunivu and varisu
thunivu and varisu

2023 -ஆம் ஆண்டு பொங்கல் முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு திரைப்படங்கள் களம் இறங்கின. இரண்டு படமும் வெளிவருவதற்கு முன்பாகவே அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை பெருமளவு சந்தோஷப்படுத்தியது.  11 ஆம் தேதி வாரிசு, துணிவு வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதில் அஜித்தின் துணிவு படம் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரை வெகுவிரைவாக கவர்ந்து சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக வசூலிலும் நல்ல வரவேற்பை கண்டு வருகிறது தமிழகத்தில் இதுவரை 100 கோடிக்கு மேல் வசூல் செய்து முன்னிலை வகிக்கிறது.

அதே போல மற்ற இடங்களிலும் துணிவு கைதான் ஓங்கி இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. அனைத்து இடங்களிலும் அஜித்தின் துணிவு திரைப்படம் வெற்றிபெற காரணம் படத்தில் ஆக்சன், காமெடி, சமூக கருத்துக்கள் மற்றும் அஜித்தின் மாறுபட்ட நடைபெறும் அனைத்தும் பிளஸ் ஆக இருப்பது தான் என கூறப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் வெளிநாடுகளில் யார் கை ஓங்கி உள்ளது என்பதை தெரிந்து கொண்ட பலரும் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது அதற்கும் பதில் கிடைத்துள்ளது. வெளிநாட்டில் விஜயின் வாரிசு படம் 75 கோடி வரை வசூல் செய்தது ஆனால் இதுவரை அங்கு லாபத்தை எட்டவில்லை என கூறுகின்றனர்.

ஆனால் அஜித்தின் துணிவு படம் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு பெற்று தற்போது 65 கோடி வசூல் அள்ளி நல்ல லாபத்தை பார்த்த வருகிறது இதற்கு முன்பு வெளியான அஜித்தின் அனைத்து படத்தின் வசூல் சாதனைகளையும் துணிவு திரைப்படம் முறையடித்து முன்னேறி உள்ளது. இதுதான் அஜித்தின் திரை வாழ்க்கையில் பெஸ்ட் வசூல் படம் எனக் கூறி வருகின்றனர்.