குத்துன்னா இப்படி இருக்கணும்.! அபிராமி வீடியோவை பார்த்து மிரளும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை அபிராமி வெங்கடாச்சலம்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் அபிராமி. இவர் ஹெச் வினோத் இயக்கிய வலிமை படத்தில் தல அஜித்துடன் நடித்திருந்தார். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அபிராமி வெங்கடாச்சலம் நடித்திருந்தார். இதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மேலும் படவாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின.

இப்பொழுது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தை ஆல்பர்ட் ராஜா என்பவர் இயக்க உள்ளார். இப்படத்தில் அபிராமி, ஆரி நடிக்கவுள்ளனர் இவர்களை தொடர்ந்து பிக்பாஸில் பிரபலமான லாஸ்லியா அவர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது முன்னணி நடிகை போல அபிராமி அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தனது சமூக வலைத்தளத்தில் குத்துச்சண்டையில் பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்நதனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஏதோ ஒரு படத்தில் நடிக்க உள்ளார் அதனால் தான் பயிற்சி எடுத்து வருகிறார் எனவும் கூறி வருகின்றனர்.

Leave a Comment