பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதி நாளில் கதறி அழுத அபிராமி.. சிம்பு செய்த தரமான சம்பவம்.

0
bigboss-ultimate-
bigboss-ultimate-

ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நிறைவடைந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி அசத்தினர்.

மேலும் பிக்பாஸை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசன் ஆரம்பத்தில் பிக் பாஸ் அல்டிமேட்டை  தொடங்கி வைத்து இருந்தாலும் ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறியதை அடுத்து பின்பு சிம்பு தொகுத்து வழங்க தற்போது சிறப்பாக சிம்பு இந்த நிகழ்ச்சியை முடித்து வைத்துள்ளார்.

நேற்று நடந்த பைனல்ஸ் எபிசோடில் பாலாஜி முருகதாஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார் அவரைத் தொடர்ந்து 2-வது இடத்தில் நிரூப் உள்ளார் அடுத்த அடுத்த இடத்தில் ரம்யா பாண்டியன் மற்றும் தாமரைச்செல்வி உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்டில் இருந்து வெளியான போட்டியாளர்களில் ஒருவரான அபிராமியை சிம்பு மேடைக்கு அழைத்து பேசினார்.

அப்போது அபிராமி எதிர்பாராதவிதமாக சிம்பு அபிராமியின் அப்பாவை மேடைக்கு அழைத்தார் அவரை பார்த்ததும் அபிராமி கதறியழுது எமோஷனலாக பேசினார். இத்தனை வருஷமாக அப்பாவை பிரிந்து இருந்தது பற்றி மிகவும் வருத்தமாக அபிராமி கூறியிருந்தார் அப்பா இல்லாமல் நான் அதிகம் கஷ்டப்பட்டு இருக்கேன்.

நான் ஸ்ட்ராங்கான பெண் தான்  ஆனால் அப்பா இல்லாததால் அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என அபிராமி கூறினார் மேலும் அபிராமியின் அம்மாவும் கண்ணீர்விட்டு துணை இல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கடினம் என பேசினார் இனியாவது அவரது பாசம் எனது குழந்தைகளுக்குக் கிடைக்கும் என அவர் கூறியிருக்கிறார்.