இன்ஸ்டாகிராமில் இருந்து தனது கணவர் பெயரை தூக்கிய அபினய் மனைவி.! அதற்கு காரணம் பாவனியா.? வெடித்தது பிரச்சனை.

விஜய் தொலைக்காட்சி ஒவ்வொரு வருடமும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை ஒளிபரப்பி வருகிறார்கள். இந்த வருடம் ஐந்தாவது சீசனை வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறார்கள் இந்த நிகழ்ச்சியில்  பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதில் ஒவ்வொருவராக ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் அபினய் இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைந்த வாக்குகளின் அடிப்படையில் எலிமினேட் செய்யப்பட்டார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் அபினய் மற்றும் பாவனி  கெமிஸ்ட்ரி தான். ஒரு டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் பொழுது அபினைய் அவர்களிடம் ராஜூ நேரடியாக பாவனியை நீங்கள் காதலிக்கிறீர்களா என கேட்டுள்ளார் இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் அபினய் மற்றும் பவானி ஆகிய இருவரும் தங்களது நிலைமையை குறிப்பிட வில்லை அதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டது இதனை பார்த்த கமலஹாசன் அவர்களே இருவருக்கும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அபினய் மனைவி கூறியதாவது  அபினய் பற்றி நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன் என தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருந்தார்.

அதேபோல் அபினய் அவர்களும் எலிமினேஷன்க்கு பிறகு எனக்கு முக்கியம் எனது குடும்பம் தான் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவரது மனைவி தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபினய் பெயரை நீக்கியுள்ளார்.  அதற்கு பதிலாக வரதன் என்ற பெயரை சேர்த்துள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள் இருவருக்கும் ஏதோ பிரச்சனை என பேசிவருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இதற்கு காரணம் பாவனி எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள் இதுகுறித்து அபினய் மற்றும் அவரது மனைவி ஏதாவது கூறினால் மட்டுமே தெரிய வரும்.

abinay
abinay

Leave a Comment