அபியும் நானும் சீரியலில் நடிக்கும் மீனாவா இது தனது கணவருடன் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

தமிழ் சினிமாவில் வெள்ளித் திரையில் நடிக்கும் நடிகைகளை விட சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள் அதற்கு முக்கிய காரணம் சீரியல்களில் குடும்ப கதாபாத்திரங்களுக்கு ஏற்ப இவர்கள் நடிக்கும் பொழுது மக்களை கவர்ந்து விடுகிறார்கள்.

அதேபோல் பல சீரியல்களில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வித்தியா வின் மோகன் என்பவர் இவர் சன் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவரும் அபியும் நானும் என்ற சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் கேரளாவை சேர்ந்தவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் சின்னஞ்சிறு வயதில் இருந்தே அவருக்கு எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்துள்ளது 9ஆம் வகுப்பு படிக்கும்பொழுதே குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

என்னதான் இவர் மலையாள திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் இவருக்கு பெரிதாக ரசிகர்கள் வரவேற்பு தரவில்லை அதனால் இவர் சீரியலில் நடிக்க வந்தார் சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு இவர் ஒரு சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.

முதன்முதலில் மலையாள திரையுலகில் வெளிவந்த சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவிற்கு அறிமுகமானார் மேலும் அந்தத் திரைப்படத்திற்கு பிறகு வித்தியா வின் மோகன் வரிசையாக பல திரைப் படங்களை கைப்பற்றி நடித்து வந்துள்ளார்.

அதாவது இவர் நேர் எதிர்,கருவறைக்,காதல் பாதை,அகிலன் போன்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இருந்தாலும் இவருக்கு சீரியலில் நடித்த போது ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்து வந்ததால் இவர் தொடர்ச்சியாக சீரியல்களை கைப்பற்றி நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகையில் பார்த்தால் இவருக்கு மிகப்பெரிய மக்கள் மத்தியில் வரவேற்பு தந்த சீரியல்தான் வள்ளி இந்த சீரியலை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது என்றுதான் கூறவேண்டும் தற்பொழுது இவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

meena
meena

இவரது திருமண வாழ்க்கையில் தன்னுடன் சேர்ந்து நடித்த வின் மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் தற்போது தனது கணவருடன் இருக்கும் இவரது அழகிய புகைப்படம் இணையத்தில் கசிந்துள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இருவருக்கும் ஜோடி பொருத்தம் அழகாக அமைந்து உள்ளது என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment