அபிஷேக் ராஜாவை தொடர்ந்து “வைல்ட் கார்ட்” மூலம் உள்ளே வந்த புதிய நபர்.! முதல் ப்ரோமோவை சரியா யார் யார் பாத்திங்க..

0
bigboss
bigboss

சின்னத்திரையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 50 நாட்களை கடந்து சிறப்பாக வெற்றிநடை கண்டு வருகிறது.இந்த வீட்டில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் இறுதியில் ஒரு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

அந்த வகையில் நமிதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி, மதுமிதா போன்றவர்கள் வெளியாகியிருந்த நிலையில் சென்ற வாரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் டாப் கன்டஸ்டன்ட் ஆன இசைவானி வெளியேறினார். இந்த சீசனை கடந்த நான்கு சீசன்களை விட ஆரம்பத்திலிருந்தே பிக் பாஸ் பல போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது நபராக வெளியேறிய அபிஷேக் ராஜா வைல்டு கார்டு என்ட்ரியாக  வீட்டினுள் நுழைந்துள்ளார் இதனை அடுத்து மற்றொரு நபரும் உடனடியாக பிக்பாஸ் வீட்டில் வருவதாக சமூக வலைதளங்களில் உலா வந்துள்ளன. இந்த நிலையில் இன்று வந்த முதல் ப்ரோமோவில் கனா காணும் காலங்கள் என்ற சீரியளை மைய்யமாக வைத்து போட்டியாளர்களுக்கு பள்ளிப்பருவ டாஸ்கைகொடுக்க அனைவரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமலஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாம் அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் இனி இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்க உள்ளார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே வந்துள்ளது. அதற்கு ஒருபக்கம் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டினுள் இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரியாக  நடன இயக்குனர் அமீர் பிக்பாஸ் வீட்டினுள் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் இன்று காலை வந்த முதல் ப்ரோமோ வில் அவரை காட்டியுள்ளனர். ஆனால் அதை பலரும் கவனித்திருக்க மாட்டார்கள் என நினைக்கின்றோம்.