விஷாலுடன் நடந்த திருமணத்திற்கு விளக்கம் அளித்த அபிநயா.! வருத்தத்தில் ரசிகர்கள்..

0
vishal-abinaya
vishal-abinaya

சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஷால் தற்பொழுது 45 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகை ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது மேலும் இது குறித்த புகைப்படங்களும் வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்து வந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் அதிரடி ஆக்சன் நடிகர்களில் ஒருவரான விஷால் தொடர்ந்து லத்தி, மார்க் ஆண்டனி மற்றும் துப்பறிவாளன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக இருக்கிறது இந்நிலையில் இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை அபிநயா நடித்து வரும் நிலையில் அபிநயாவுக்கும் விஷாலுக்கும் திருமணமாகிவிட்டதாக சோசியல் மீடியாவில் தகவல் வைரலானது.

இது குறித்து தற்பொழுது நடிகை அபிநயா விளக்கம் அளித்து இருக்கிறார் அதாவது ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நான் விஷாலின் மனைவியாக நடித்து வருகிறேன் அது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகிய நிலையில் நிஜமாகவே எங்களுக்கு திருமணமாகி விட்டது என்ற வதந்திகளை கிளப்பப்பட்டு வருகிறது என்றும் இது முழுக்க முழுக்க பொய்யானது என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ரசிகர்களும் எப்படியோ விஷால் திருமணம் செய்து கொண்டால் சரி என நினைத்த நிலையில் இது பொய்யான வதந்தி என தெரியவந்துள்ளது. நடிகை அபிநயா சரத்குமார் அவர்களுடைய நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், தனி ஒருவன், ஷமிதாப், விழித்திரு, சீதாராமன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் இதற்கு முன்பு வெளிவந்த பூஜை திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இரண்டாவது முறையாக நடிகர் விஷாலுடன் இணைந்து அபிநயா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.