அப்துல் கலாம் வரலாறு படம் எடுத்தால் இவர்தான் ஹீரோ.! எனக் கூறிய இயக்குனர் சுதா கொங்கரா..

இயக்குனர் சுதா கொங்கரா தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தென்னிந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மேலும் இவர் இயக்கத்தில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பினை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் அவார்ட் நிகழ்ச்சியின் பொழுது தொகுப்பாளர் அப்துல் கலாம் அவர்களின் புகைப்படத்தை காமித்து ஐயாவின் வரலாறு படத்தினை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு எந்த ஹீரோவை வைத்து எடுப்பீர்கள் என சுதா கொம்ராவிடம் கேட்டதற்கு அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் நடிகர் சூர்யாவின் பெயரை கூறுகிறார் இதனைக் கேட்ட ரசிகர்கள் அரங்கையே அதிர வைக்கின்றனர்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படத்திற்கு பிறகு தான் சூர்யா தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். மேலும் இந்த படத்தினை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை அபர்ணா முரளி நடித்திருந்தார் மேலும் இவர்களை தொடர்ந்து இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் பாடல்கள், திரைக்கதை என அனைத்து மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் பணியாற்றிய 5 பேருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.

எனவே விருது வழங்கும் விழாவில் ஜிவி பிரகாஷ், ஜோதிகா, சூர்யா, சுதா கொங்கரா, அபர்ணா முரளி ஆகியோர்கள் தேசிய விருது பெற்று மகிழ்ந்தார்கள் இதனால் திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள்ல வர அனைவரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். சூர்யாவினை தொடர்ந்து அந்த தொகுப்பாளர் தனுஷின் புகைப்படத்தை காமித்த நிலையில் அதற்கு சுதா கொங்கரா இவர் பெஸ்ட் ஆக்டர் என கூறியுள்ளார்.

Leave a Comment