ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் செல்வராகவனுடன் தான் பேசிய ஆதாரத்தை வெளியிட்ட பார்த்திபன்.! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன், இவரின் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, தன்னுடைய இயக்கத்தில் மிக சிறந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார், அந்தவகையில் இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.

தற்பொழுது செல்வராகவனிடம் ரசிகர்கள் விரும்பி கேட்பது புதுப்பேட்டை இரண்டாம் பாகம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது என்று தான், சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலை சென்று கொண்டிருக்கிறது எனவும், அதற்காக ஸ்கிரிப்ட் ஒர்க் போய்க்கொண்டிருக்கிறது என்றும் தனது ட்விட்டரில் பதிலளித்திருந்தார்.

இந்தநிலையில் நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டரில் ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளார், அந்த ஆடியோவில் செல்வராகவன் மற்றும் பார்த்திபன் உரையாடல் இருக்கிறது, அதில் உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்வராகவன் சார் மீண்டும் எப்பொழுது ஆயிரத்தில் ஒருவன் என்று பார்த்திபன் கேட்கிறார். இதற்கு பதிலளித்த செல்வராகவன் என் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியதற்கு நன்றி மீண்டும் விரைவில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் இணைவோம் என கூறியுள்ளார்.

அதனால் நிச்சயம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் வெளியாகும் என ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment