ஆசை படத்தில் அஜித்திற்கு குரல் கொடுத்தது யார் தெரியுமா.? அதுவும் பிரபல நடிகராம்

0
aasai_tamil360newz
aasai_tamil360newz

நடிகர் அஜித் தற்பொழுது முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தற்பொழுது வலிமை திரைப்படத்தில் நடித்துவருகிறார் ஒரு காலகட்டத்தில் அஜித் பல தோல்விகளை படங்களை கொடுத்து வந்தார். அப்பொழுது அஜித்தின் சினிமா வாழ்க்கையில் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் ஆசை.

1995ஆம் ஆண்டு வசந்த் இயக்கத்தில் மணிரத்தினம் தயாரிப்பில், அஜித் நடிப்பில் வெளியாகி திரைப்படம் ஆசை, இந்த திரைப்படத்தில் அஜீத் குமாருடன் இணைந்து சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகினி, பூர்ணம், விஸ்வநாதன், வடிவேலு, நிழல்கள் ரவி ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

அஜித் குமார் மற்றும் சுவலட்சுமியின் காதல் காட்சிகளை அற்புதமாக திரையில் காட்டியவர் வசந்த், படத்தில் அஜித்தின் துறுதுறுப்பான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது, இந்த திரைப்படத்தின் கதையை முதலில் இயக்குனர் வசந்த் சூரியாவிடம் தான் கூறினாராம் ஆனால் ஒரு சில காரணங்களால் சூர்யா நடிக்க முடியாது என கூறியுள்ளார்.

அதன்பிறகு அஜித்திடம் இந்த கதை வசந்த் கூறியுள்ளார் கதை அஜித்திற்கு பிடித்துப்போணதால்  உடனே ஒப்புக் கொண்டாராம். தல அஜித் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில் தமிழ் பேசவே மிகவும் தடுமாறுவாரம், அதனால் தல அஜித்திற்கு ஆசை திரைப்படத்தில் பிரபல நடிகர் சுரேஷ் டப்பிங் பேசினாராம், நடிகர் சுரேஷ் தல அஜித்தின் அசல் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.