புருவத்தை சேவ் செய்து கொண்ட பிக்பாஸ் ஆர்த்தி.! இந்தக் கொடுமையான புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

0

தமிழ் சின்னத்திரையில் தன்னுடைய காமெடியால் பல ரசிகர்களை கவர்ந்தவர் ஆர்த்தி, அதன் பிறகு வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார், நடிகை ஆர்த்தி பல திரைப்படங்களில் நடிகைக்கு தோழியாகவும் காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜித், விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார், மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மேலும் பிரபலமடைந்தார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி அடிக்கடி சமூகத்தில் நடக்கும் பிரச்சனைக்காக ஏதாவது கருத்து தெரிவிப்பார், அதுமட்டுமில்லாமல் அடிக்கடி ஏதாவது கருத்து கூறி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

அந்த வகையில் தற்பொழுது போட்டோ எடிட் செய்யும் செயலின் மூலம் தன்னுடைய கண் புருவத்தை நீக்கி புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இப்படி மாறிட்டீங்க என கிண்டல் எடுத்து வருகிறார்கள்.