வாத்தி கம்மிங் பாடலுக்கு மரணகுத்து குத்திய ஆர்த்தி.! சத்தமா சிரிச்சுடுங்க… Come-on.. Bore அடிக்கிறவங்க கலாய்கலாம்…

பிரபல காமெடி நடிகைகளில் ஒருவர் ஆர்த்தி. இவர் தமிழ் திரை உலகில்  ஒரு கலக்கு கலக்கி உள்ளார். இவர் இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் 2004 ஆம் ஆண்டு கிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த குட்டி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவருக்கு பெஸ்ட் பீமன் காமெடி என்ற விருது ஆனந்த விகடன் தந்தது.

இந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு காமெடி ஆக்டர் ஆன கணேஷ் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார். இவருக்கு வாய் கொழுப்பு அதிகமாக இருந்ததால் பிக்பாஸ் வீட்டில்  பாதியிலேயே வெளியேறி விட்டார். பிக்பாஸில் இருந்தபோது உன்னைப்பற்றி எனக்கு தெரியும் என்னை பற்றி உனக்கு தெரியும் நம்மைப் பற்றி உலகத்துக்கே தெரியும் என்ற காமெடி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.

திருப்பூரில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஆர்த்தி அவர் கணவருடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை வெளியிடும் போது ரொம்ப போரடிக்குது வாங்க சத்தமா சிரிச்சுட்டேன் கலைச்சுட்டு போங்க என பதிவிட்டுள்ளார்.

Leave a Comment