ஆரியுடன் ஓன்று சேர்ந்து கொண்டாடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் புகைப்படம்

கடந்த நான்கு வருடங்களாக விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியாக நடைபெற்று வரும் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியி கடந்த 17ஆம் தேதி நிறைவு பெற்றது.

இந் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது பலரும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக இல்லை, போர் அடிக்குது போன்ற பல கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இப்படி கருத்து தெரிவித்து வந்தாலும் போகப்போக பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்தது. இதன் மூலம் ஆரி மிகவும் பிரபலமடைந்தார்.

பிக்பாஸில் இதுவரையிலும் பங்கேற்ற எவருக்கும் இப்படிப்பட்ட ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகவில்லை என்று தான் கூற வேண்டும். ஆரியின் நேர்மையானா குணத்தால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

அனைவரும் நினைத்தபடியே ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் 50 லட்சம் வென்றார். இரண்டாவதாக பாலாஜி முருகதாஸ் மற்றும் மூன்றாவதாக ரியோ ராஜ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்கள்.

ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதால் பிக்பாஸில் கலந்து கொண்ட மற்ற சக போட்டியாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தான் கூற வேண்டும். சொல்லும் அளவிற்கு மற்ற போட்டியாளர்களின் முகத்தில் சந்தோஷம் இல்லை.

இதெல்லாம் முடிந்து ஒரு வழியாக தற்பொழுது பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது அதில் ஆர்யாவுடன் இணைந்து அனைத்து ஹவுஸ் மேட்சும் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.இப்புகைப்படத்தை பார்த்த ஆரி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

aari
aari
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment