தன்னுடைய பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு சரியான டீரீட் கொடுத்த ஆர்யா..! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்..!

aaraya sarpatta parambarai latest look: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த காலா மற்றும் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மெட்ராஸ் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனரான பா ரஞ்சித் சமிபத்தில் சார்பட்டா பரம்பரை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஆர்யா அவர்கள் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா ஒரு பாக்ஸிங் வீரராக நடிக்க உள்ளாராம் அந்த வகையில் தற்போது தன்னுடைய உடலை அதற்கு தகுந்தார் போல ஏத்தி உள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா கபிலன் எனும் கதாபாத்திரத்தில் தான் நடிக்க போகிறாராம் பொதுவாக பா ரஞ்சித் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே தன்னுடைய விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டுதான் எடுப்பார்.

அந்த வகையில் ஆர்யா நடிக்கும் இந்த திரைப்படமானது முழுக்க முழுக்க ஒரு பாக்ஸிங் வீரரின் கதை ஆகும். மேலும் இந்த திரைப்படத்தை மெகா ஹிட் கொடுத்துவிட வேண்டும் என அயராது உழைத்து வரும் ஆர்யாவின் நிலையை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனெனில் பொதுவாக பா ரஞ்சித் எடுக்கப்படும் அனைத்து திரை படங்களுமே வசூலில் வெளுத்துக்கட்டுகிறதோ இல்லையோ விமர்சனத்தில் கங்கணம் கட்டிக் கொண்டு ஆடும் அந்த வகையில் தற்போது இவர் இயக்கும் திரைப்படம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடிகர் ஆர்யா இந்த திரைப்படத்தை காண போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

sarpattaa parambarai
sarpattaa parambarai

Leave a Comment