பிக் பாஸ் ஆரவ்க்கு கௌதம் மேனன் பட நடிகையுடன் திருமணம் முடிந்தது!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

0

Aarav wedding photos: பிக் பாஸ் சீசன் 1 வெற்றியாளராக திகழ்ந்தவர் ஆரவ். பிக் பாஸ் சீசன் 1 இல் ஆரவும், ஓவியாவும் இணைந்து பேசப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் மருத்துவ முத்தத்திற்கு பேர் போனவர்கள். இவர்கள் காதல் பிரேக் அப் பில் முடிந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆரவ் பிக் பாஸ்-லிருந்து வெளிவந்த பிறகு மார்க்கெட் ராஜா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த வாரம் இவருக்கும் கௌதம் மேனன் இயக்கி வரும் ஜோஸ்வா என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை ராகேயுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பேசப்பட்டது.

ஆனால் தற்போது இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது. பிக் பாஸ் சீசன் 1 பங்கு பெற்ற சிலர் கலந்துகொண்டுள்ளனர். ஆரவ்வின் திருமணத்திற்கு சீசன் 1ல் இருந்த ஆர்த்தி, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், சுஜா வருணி, காயத்ரி, சினேகன், இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், இயக்குனர் சரண், நடிகை சங்கீதா போன்றோர் கலந்து கொண்டனர் என தெரியவருகிறது.

நடிகை பிந்துமாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரவின் திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

arav-wedding
arav-wedding
aarav
aarav
bindhumathavi
bindhumathavi