திருமணத்திற்கு பிறகு முதல் முதலாக தனது மனைவியின் புகைப்படத்தை டுவீட்டரில் பதிவிட்ட ஆரவ்!!

0

aarav post his wife photo: பிக் பாஸ் ஆரவ் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவுக்கு இவர் பிரபலம் ஆனவர். இவர் பிக்பாஸிற்க்கு வருவதற்கு முன் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். என்னதான் இவர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அந்தளவுக்கு பிரபலமாகவில்லை.

ஆனால் பிக்பாஸ் வந்த பிறகுதான் ஆரவ் பிரபலமானார். பிக்பாஸில் இவரும் ஓவியாவும் காதலித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆரவ் ஓவியாவை திருமணம் செய்து கொள்ளாமல் கௌதம் மேனன் இயக்கத்தில் இமைபோல் காக்க என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ராஹியை செப்டம்பர் 6 ஆம் தேதி பிரபல ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு சினிமா பிரபலங்களான இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண்,சரண் மற்றும் பிக் பாஸ் பிரபலங்களான பிந்துமாதவி சக்தி, சினேகன், வெங்கட்ராமன், கணேஷ், ஆர்த்தி, சுஜா வருணி, காயத்ரி ரகுராம் போன்ற பலர் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆரவ்விற்கு  திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அனைவரும் நடிகை ஓவியா திருமணத்திற்கு வருவார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ கேரளாவில் இருந்ததால் லாக் டவுன்  காரணமாக வரமுடியவில்லை என தெரிகிறது. மேலும் இன்ஸ்டாகிராமிலாவது வாழ்த்துக்கள் தெரிவிப்பார் என எதிர்பார்த்தனர் அதுவும் நடக்கவில்லை.

நடிகர் ஆரவ் திருமணத்திற்கு பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு இமைபோல் காப்பேன் என கூறியுள்ளார். தனது மனைவி நடித்த முதல் படத்தின் பெயரை பதிவிட்டு அவரை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அந்த படத்துல வர ஹீரோயின்… ஆ இது என்ன பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.