பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் தனது அண்ணனை அறிமுகப்படுத்திய அமீர்..! ரசிகர்களை கண்கலங்க வைத்த வீடியோ.

0
amir
amir

விஜய் டிவியில் பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சி மிக பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக் பாஸ் இல் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஜோடியாக இணைந்து நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்தது அதில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் டைட்டில் வின் செய்தனர்.

தற்போது பிபி ஜோடிகள் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகின்றன. இதிலும் பிக் பாஸ் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தனது நடனத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றன. இதில் சிலர் ரீல் ஜோடிகளாகவும் சிலர் ரியல் ஜோடிகளாகவும் நடனமாடி வருகின்றனர். அந்த வகையில் அமீர் மற்றும் பாவணி இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் சீசன் 2வில் நடனமாடி வருகின்றனர்.

அமீர் பாவணியை காதலித்து வருகிறார் பாவணிக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்தாமல் அமீருடன் நெருங்கி பழகி வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5 யில் கலந்து கொண்ட அமீர் அப்போது அவரது கடந்த கால வாழ்க்கையை பற்றி கூறியது மக்கள் பலரையும் கண்கலங்க வைத்தது.

மேலும் அமீருக்கு ஒரு அண்ணன் இருப்பதாகவும் அப்போது தெரிவித்திருந்தார்.  ஆனால் அமீர் அவர் அண்ணன் உடன் இல்லை வேறு ஒரு குடும்பத்துடன் இருந்து வந்தார். இந்த நிலையில் பிபி ஜோடி 2 கிராண்ட் பினாலே வருகின்ற செப்டம்பர் 4ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இந்த பைனல் நிகழ்ச்சிக்கு அமீரின் அண்ணன் வந்துள்ளார் அப்போது அமீர் அவர் அண்ணன் குறித்து பேசியது.

நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் என் அண்ணனிடம் அதிகமாக பேச ஆரம்பித்தேன், இவரும் என்னை விட பெரிய டான்சர் ஆனால் அவனது கனவு எல்லாத்தையும் விட்டு விட்டு இப்பொழுது மூட்டை தூக்கி வருவது எனக்கு மிகவும் கஷ்டத்தை கொடுக்கிறது என்றார் அமீர் இதைக் கேட்ட பாவனி மற்றும் அங்கு இருந்த பலரும் கண் கலங்கினர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..