காயத்துடன் நடனமாடிய அமீர் – சோசியல் மீடியாவில் சொல்லி புலம்பும் பாவனி.! வெளிவரும் உண்மை.

0
amir-and-bhavani
amir-and-bhavani

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் படும் பிரபலம் இது முதல் சீசன் எதிர்பாராத அளவு வெற்றி பெற்றதை தொடர்ந்து சீசன் சீசன் ஆக நடந்து வருகின்றன. இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசன் கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் உள் சில போட்டியாளர்கள் இடையே காதல் மலரும் ஆனால் அந்த காதல் நீடிக்குமா என்றால் இல்லை.

அந்த பிக் பாஸ் வீட்டிற்குள் அவர்களுக்குள் இருக்கும் ஈர்ப்பு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தால் இருவரும் பேசிக்கொள்ள கூட மாட்டார்கள் அந்த அளவிற்கு வெளி உலகம் அவர்களை மாற்றி விடும். இதற்கு மாறாக கடந்த பிக் பாஸ் ஐந்தில் கலந்து கொண்ட நடன கலைஞர் அமீர் பாவனியிடம் காதலை தெரிவித்து இருந்தார். பாவனி ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை இழந்து இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் அமீர் அவரது எண்ணத்தில் தீவிரமாக இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து கூட பாவணியை காதலிப்பதை நிறுத்தவில்லை.  தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடனமாடி வருகின்றனர். அப்போதும் கூட அமீர் பாவனியிடம் காதலை கூறினார்.

பாவனி இதுவரை வெளிப்படையாக எந்த பதிலும் சொல்லவில்லை என்றாலும் அவரும் அமீரை காதலித்து தான் வருகிறார். கடந்த வார எபிசோடில் கூட அமீர் மற்றும் பாவணி திருமணம் செய்து கொள்வது போன்று அரங்கேறியது. இந்த நிலையில் அமீர் அவரது முட்டியில் அடிபட்டு காயத்துடன் தான் நடனம் ஆடி உள்ளார் சேனல் சொல்லியும் கேட்கவில்லை என பாவனி சோசியல் மீடியா பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

அமீர் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவர் அளித்த ரிப்போர்ட்டை பாவணி வெளியிட்டுள்ளார். விஜய் டிவி சேனலும் அமீரிடம் டான்ஸ் ஆடாமல் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது வீல் சேரில் உட்கார்ந்து டான்ஸ் ஆடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் இதை எதையுமே அமீர் கேட்காமல் காயத்துடனே நடனமாடி வருகிறாராம் இதனைப் பாவணி அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.