வெற்றிமாறன், சூர்யா இணையும் “வாடிவாசல்” படத்தில் வில்லனாக களம் இறங்கிய அமீர்.? இவருக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை கொடுத்துள்ளனர் தெரியுமா..?

நடிகர் சூர்யா சினிமா எப்படிபட்டது என்பதை நன்றாக புரிந்து கொண்டு பயணித்தாலும் அவரது சமீபகால திரைப்படங்கள் சில பெரிய பெரிய தோல்வியை சந்தித்ததால் இரண்டாம் கட்ட நடிகர்களில் அவரும் இணைந்தார்.

டாப் நடிகர்கள் லிஸ்ட்டில் அவரை இணைய இந்த தடவை இயக்குனரை தேர்ந்தெடுத்த விதம்தான் வேற அந்த வகையில் பெண் இயக்குனரான சுதா கொங்கரா தேர்ந்தெடுத்து சூரரைபோற்று என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் அவருக்கு பேரையும் புகழையும் மீண்டும் பெற்றுத் தந்ததால் தற்பொழுது பல முன்னணி இயக்குனர்கள் சூர்யாவுக்கு கதைசொல்லி படங்களை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இவர் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இதை தொடர்ந்து அவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யாவை மிரட்டும் வகையில் வில்லனை தேர்வு செய்து உள்ளார் வெற்றிமாறன்.

தமிழ்சினிமாவில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கியும் நடித்துவரும் அமீர் தான் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன மேலும் அவரின் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி உள்ளதால் நிச்சயம் அவர் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஏத்த வில்லனாக இருப்பார் என தற்போது கூறப்படுகிறது.

அதில் அமீர் முறுக்கு மீசையும், மொட்டைத்தலை, கட்டுமஸ்தான உடம்பு என இருப்பதால் நிச்சயம் இந்த படத்தில் அவருக்கான ரோல் வேற லெவல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. வாடிவாசல் திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் மருதன் என கூறப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சூர்யா மனைவியின் அண்ணனாக அவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment