கடந்த ஆண்டு வெளியான படம் ஒன்றில் , ஒரு சீனில் வந்துப்போன பிக்பாஸ் 5 போட்டியாளர் அமீர்.! எந்த படம் தெரியுமா.?

0
amir
amir

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது இந்த நிகழ்ச்சியில் இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஏழு போட்டியாளர்கள் உள்ளனர். மேலும் பிக் பாஸ் பைனல் வாரத்தில் ஐந்து போட்டியாளர்களே பைனல்ஸ் செல்வார்கள்.

இதனை அடுத்து தற்போது இருக்கும் ஏழு போட்டியாளர்களில் இந்த வாரம் இரு போட்டியாளர்கள் வெளியேற உள்ள நிலையில் பிக்பாஸ் 3 லட்சம் கொண்ட பணப்பெட்டியை பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்து யாராவது ஒரு போட்டியாளர் இதை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என கூறியிருந்தார்.

அதனையடுத்து போட்டியாளர்கள் பலரும் என்ன செய்யலாம் என யோசித்து வருகின்ற இந்த நிலையில் பணத்தின் மதிப்பு நேரம் ஆக ஆக கூடிக்கொண்டே போகும் அந்த வகையில் இன்று வந்த முதல் ப்ரோமோவில் பணத்தின் மதிப்பு 11 லட்சம் வரை எகிறி உள்ளது. இதனை அடுத்து அமீர் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுவதாக போட்டியாளர்கள் இடம் கூறியுள்ளார்.

ஆனால் அடுத்து வந்த  ப்ரோமோவில் அமீர் நான் ப்ராங் பண்ணேன் நான் பணத்தை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.  தற்போது சிபி 12 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அமீர் ஒரு நடன இயக்குனர் மேலும் அவர் டான்ஸ் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார்.

மேலும் இவர் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நடித்த தாதா87 படத்தில் நடன கலைஞராக ஒரு பாடலில் தோன்றி நடித்து உள்ளார் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.