நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5 யில் போட்டியாளராக கலந்து கொண்டவர் சின்னத்திரை சீரியல் நடிகை பாவனி ரெட்டி மற்றும் நடன கலைஞர் அமீர். வைல்ட் காடு என்ரியாக பிக் பாஸ் வீட்டின் உள் நுழைந்து அமிர் பாவனியிடம் காதலை தெரிவித்து இருந்தார். பாவனி அமிரின் காதலை மறுத்து இருந்தாலும் அவருடன் சகஜமாக பேசி வந்தார்.
பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை நல்ல பிரண்டாக இருந்து வந்த அமீர் மற்றும் பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் சில இடங்களுக்கு ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியிலும் அமீர் மற்றும் பாவனி இருவரும் ஜோடியாக நடனம் ஆடி வருகின்றனர்.
இவர்களது நடனம் ஒரு பக்கம் ரசிகர்களை கவர்ந்தாலும் இருவர்குள் இருக்கும் நெருக்கத்தை வைத்து ரசிகர்கள் அமீர் மற்றும் பாவனி காதலிக்கிறார்களா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ள பிபி ஜோடிகள் எபிசோட்டில் அமீர் பாவனிக்கு ப்ரபோஸ் செய்துள்ளார். அமீர் பாவனியிடம் உன்கிட்ட பல தடவை நான் சொல்லிவிட்டேன்.
ஆனால் இப்ப வரையும் உன்னிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என சொல்லி விட்டு சர்ப்ரைஸ் ஆக ஒரு ரிங்கை பவானிக்கு கொடுக்கிறார். அதைப் பார்த்து பாவனி மிகவும் எமோஷ்னலாகி கண்கலங்கி நிற்கிறார். ஆனால் அந்த மோதிரத்தை பாவனை வாங்கினாரா இல்லையா என்பது ப்ரோமோவில் வெளிவரவில்லை.
ஆனால் பாவனி கையில் அந்த மோதிரம் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை அமீர் வெளியிட்டுள்ளார். பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் அந்த மோதிரம் பாவனி கையில் இல்லை பின்பு அமீர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் அந்த மோதிரம் இருப்பதால் பாவனி அமீரின் காதலை ஏற்றுக் கொண்டார் என அமீர் பாவனி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

